Tamil

கலா பொல 2020 – இலங்கையின் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சி – 2020 பெப்ரவரி 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது

Summary

ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுக்கும் ‘கலா பொல’ திறந்தவெளி ஓவியக் கண்காட்சி கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் 2020 பெப்ரவரி 23 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இடம்பெறவுள்ளது. கலாபவனத்தில் தமது படைப்புகளை காட்சிப்படுத்தக் கூடியவர்களே முக்கியத்துவம் பெற்றக் காலத்தில், […]

ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுக்கும் ‘கலா பொல’ திறந்தவெளி ஓவியக் கண்காட்சி கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் 2020 பெப்ரவரி 23 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இடம்பெறவுள்ளது.

கலாபவனத்தில் தமது படைப்புகளை காட்சிப்படுத்தக் கூடியவர்களே முக்கியத்துவம் பெற்றக் காலத்தில், ஜோர்ஜ் கீற் மன்றத்தின் எண்ணக்கருவில் உருவான கலா பொல, 1993 ஆம் ஆண்டில் முதன் முறையாக 30 ஓவியங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் 25 ஆண்டுகால இடையறாத ஆதரவுடன் கலா பொல, ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் சந்தித்துக் கொள்வதுடன், வலையமைப்பை ஏற்படுத்தி, தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க மிகவும் விரும்பப்படும் உள்ளூர் தளமாக படிப்படியாக வளர்ந்துள்ளது. கலா பொல 2019 இல் 350 இற்கும் அதிகமான கலைஞர்கள் மற்றும் 31,000 இற்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர். மேலும், கலா பொல நடத்திய சிறுவர்களுக்கான கலைக்கூடத்தில் 235 குழந்தைகள் ஓவியம் மற்றும் களிமண் வேலைகளில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக கலா பொல, இலங்கையில் உள்ள பல கலைஞர்களுக்கு அவர்களின் கைவினைகளை வளர்க்கவும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தவும் உதவியுள்ளது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவே ஜோன் கீல்ஸ் அமையமாகும். ஜோன் கீல்ஸ் அமையம் ஆறு முக்கிய பிரிவுகளின் கீழ் பல நீண்ட கால மற்றும் நிலைபேறான சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை முன்னெடுக்கும் அதேவேளை, கலா பொல அதன் கலை மற்றும் கலாச்சார பிரிவின் முக்கிய சமூக பொறுப்புணர்வு முயற்சியாகும். இது இலங்கை கலைகளையும், கலைஞர்களையும் நீடித்த மற்றும் சீரான சமூக வளர்ச்சியின் பொருட்டு மேம்படுத்தி ஊக்குவிக்க முயற்சிக்கின்றது.

ஜோர்ஜ் கீற் அறக்கட்டளை (GKF) காட்சி, கலை மற்றும் கலைஞர்களை வளர்ப்பதன் நோக்கமாக, இலங்கை கலைஞரான ஜோர்ஜ் கீற்றின் வாழ்நாளில் 1988 ஜூன் 18ஆம் திகதி அன்று ஸ்தாபிக்கப்பட்டது. ஜோர்ஜ் கீற் அறக்கட்டளை வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு அவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தவும், அவர்கள் தமக்கான வாடிக்கையாளர்களை உருவாக்க, அவர்களின் கற்றல் மற்றும் வலையமைப்பை மேம்படுத்தவும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வழி வகுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கோடைக்கால திறந்தவெளி ஓவியக் கண்காட்சிகளினால் ஏற்பட்ட உணர்வுத் தூண்டுதலின் காரணமாக உருவான இலங்கையின் ‘கலா பொல’, இந்தக் கண்காட்சிகளின் துடிப்பையும் உற்சாகத்தையும் உண்மையான இலங்கை சுவையுடன் கொண்டு வருவதுடன், உள்ளூர் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் விருந்தினர்களுக்கு இலங்கையின் காட்சிக் கலை திறமைகளை வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஓவியங்கள் கிடைப்பதுடன், அவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை நடனம், நாட்டுப்புற பாடல்கள், டிரம்மிங் மற்றும் பிற உள்ளூர் கலைஞர்களின் நேரடி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளதுடன், இது இலங்கையின் பலவிதமான கலைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் நிகழ்வை ஒரு கலை மையமாக மாற்றுகிறது.இதுமட்டுமன்றி, தம்மைப் போன்ற எண்ணம் கொண்ட கலைஞர்கள் மற்றும் தனிநபர்களை சந்தித்து, தொடர்புகொள்வதன் மூலம் கலா ​​பொல கலைஞர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவும் உதவுகிறது.

இந்த ஆண்டு கலா பொலவுக்கான கலைஞர்களின் பதிவு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதுடன், 370 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றது. காட்சிக் கலையின் வெளிப்படுத்தலை வருடத்தின் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தாமல், ஜோன் கீல்ஸ் அமையம் www.srilankanartgallery.com என்ற டிஜிட்டல் கலாபவனத்தை நடத்தி வருவதுடன், இது ஆண்டு முழுவதும் கலை மற்றும் சிற்பக்கலைகளின் உள்ளூர் திறமைகளை காட்சிப்படுத்துவதுடன், பதிவுசெய்யப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்களை இந்நாள்வரை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *