Tamil

VMware அறிமுகப்படுத்தியுள்ள 5G மற்றும் Edge மேம்பாடுகள் இலங்கையில் புத்தாக்கத்தின் வழிநடாத்தலுடனான வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை முன்னெடுக்கிறது

Summary

Cloud Native Support உடன் வலுப்படுத்தப்பட்ட 5G Telco Cloud உற்பத்தி வரிசை, இலங்கையின் cloud மற்றும் மொபைலுக்கு முதலிடமளிக்கும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்த வணிகங்களுக்கு உதவுகிறது VMware, Inc. (NYSE: VMW) நிறுவனம் இலங்கையில் 5G வலுவூட்டப்பட்ட புத்தாக்கங்களுக்கான வளர்ந்து வரும் கேள்விகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்காக  தொடர்பாடல் சேவை […]

Cloud Native Support உடன் வலுப்படுத்தப்பட்ட 5G Telco Cloud உற்பத்தி வரிசை, இலங்கையின் cloud மற்றும் மொபைலுக்கு முதலிடமளிக்கும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்த வணிகங்களுக்கு உதவுகிறது

Young engineer businesswoman with tablet in network server room

VMware, Inc. (NYSE: VMW) நிறுவனம் இலங்கையில் 5G வலுவூட்டப்பட்ட புத்தாக்கங்களுக்கான வளர்ந்து வரும் கேள்விகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்காக  தொடர்பாடல் சேவை வழங்குனர்களை வலுவூட்டுவதற்காக தனது 5G Telco Cloud Platform இயங்குதளத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. காவி தரத்துடன் வலுவூட்டப்பட்ட ஒரு சீரான cloud முதன்மைத் தீர்வான VMware 5G Telco Cloud Platform இயங்குதளம் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட cloud உள்ளார்ந்த உள்கட்டமைப்பால் இயக்கப்படுவதுடன், இது தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு பிராந்தியத்தில் எதிர்காலத்தை முன்னோக்கிய தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு உதவ இடமளிக்கின்றது.

அடுத்த 15 ஆண்டுகளில் 5G ஆனது ஆசியாவின் பொருளாதாரத்திற்கு கிட்டத்தட்ட 900 பில்லியன் டொலர் தொகையை பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்[1]  , நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் வளர்ச்சி மாற்ற முயற்சிகளை முடுக்கிவிடவும் வணிக புத்தாக்கங்களின் வேகத்தை விரைவுபடுத்தவும் இந்த தொழில்நுட்பத்தின் சாத்தியம் மிகப்பெரியது. வணிகங்கள் 5G உடன் தங்கள் வளர்ச்சியை அதிகமாக்குவதற்கு, இலங்கையில் உள்ள தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட cloud ஆல் இயக்கப்படும் களத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு வலையமைப்பு தேவைப்படுகிறது. இது காவி-தர செயல்திறன், விரிதிறன் மற்றும் தரத்தைப் பேணும் அதேசமயம், இணைய மேம்பாட்டு வேகத்தையும் தீவிரமான செயல்பாட்டையும் வழங்குகிறது. VMware இன் புத்தாக்கமான multi-cloud இயங்குதளம் 5G வலையமைப்புக்களின் அறிமுகப்படுத்தலை எளிதாக்கி, துரிதப்படுத்துகிறது. அதே நேரத்தில் தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு cloud உள்ளார்ந்த கொள்கைகளைத் தழுவுவதற்கு இடமளிப்பதுடன், வணிகங்கள் மத்தியில் வளர்ந்து வரும் கேள்விகளை சிறப்பாகப் பூர்த்தி செய்ய புத்தாக்கமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளை விரைவாக சந்தையில் வெளிக்கொண்டு வர உதவுகிறது.

“எங்கள் வாடிக்கையாளர்களின் இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் ஒரு விரிவான தொலைதொடர்பாடல் மற்றும் edge cloud உற்பத்தி வரிசையை வழங்குவதை VMware தொடர்ந்து விரைவுபடுத்தி வருவதுடன், நாளைய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு உதவுகிறது,” என்று இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான VMware இன் விற்பனை முகாமையாளரான தேவேந்திரா மானுவல் கூறினார். “Telco Cloud Platform இல் cloud உள்ளார்ந்த தொழில்நுட்பங்களின் துணையுடன், தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் தற்போது புதிய பயன்பாடுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும், செயல்பாட்டு சிக்கல்களைக் குறைப்பதற்கும், உரிமையாண்மை சேமிப்பின் கணிசமான மொத்த செலவை விளங்கிக் கொள்ளவும் தங்கள் புத்தாக்க வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் அவர்களின் 5G வலையமைப்பு அறிமுகங்களை விரைவுபடுத்தி, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

VMware Telco Cloud Platform ஆனது vCloud NFV தீர்வின் பரிணாமமான VMware Telco Cloud Infrastructure மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட domain ஒழுங்கமைப்பு மற்றும் தன்னியக்கமயமாக்கத் திறன் கொண்ட VMware Telco Cloud Automation ஆகியவற்றை இணைக்கின்றது. cloud உள்ளார்ந்த தொழில்நுட்பத்தை இலகுவாகத் தழுவி, ஒன்றுக்கு மேற்பட்ட cloud உள்கட்டமைப்பின் மத்தியில் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு 5G தயார்நிலை கொண்ட Telco Cloud Platform பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் NFV வலையமைப்புக்களிலிருந்து cloud உள்ளார்ந்த மற்றும் சுயாதீன பயன்பாடுகள் மெய்நிகராக்கம் செய்யப்பட்ட வலையமைப்புக்களுக்கு வளர்ச்சி மாற்றம் கண்டு வருகின்ற நிலையில், VMware ஆனது தனது VMware vCloud NFV தீர்விலிருந்து Telco Cloud Infrastructure இற்கு வளர்ச்சி மாற்றம் கண்டு, தொலைதொடர்பாடல் வலையமைப்புக்களுக்கு மத்தியில் Virtual Network Functions (VNFs) மற்றும் Cloud Native Network Functions (CNFs) என இரண்டிலும் ஒரு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த தளமேடையை தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு வழங்குகின்றது. Telco Cloud Infrastructure ஆனது தொலைதொடர்பாடல் மையப்படுத்தப்பட்ட மேம்பாடுகளுடன் வலையமைப்பு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பரவலாக்கம் செய்யப்பட்டுள்ள cloud ஏற்பாடுகளுக்கு உதவுகின்றது. அத்துடன் பல மில்லியன் கணக்கான நுகர்வோர் மற்றும் நிறுவன பயனர்களுக்கு மேம்பாடு மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இந்த தொலைதொடர்பாடல் மையப்படுத்தப்பட்ட மேம்பாடுகள் தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு இணைய மேம்பாட்டு வேகம் மற்றும் தீவிர செயல்திறனைப் உதவுகின்ற அதே நேரத்தில் காவி-தர செயல்திறன், விரிதிறன் மற்றும் தரத்தையும் பேணுகின்றன.

இறுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட Telco Cloud Infrastructure உடன், VMware இன் Telco Cloud Automation வலையமைப்பு செயல்பாடுகள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த வாழ்க்கைச்சுழற்சி நிர்வாகத்தை நுண்ணறிவுடன் தன்னியக்கமயமாக்குகின்றது. அதன் மூலமாக செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும், வள பயன்பாட்டை மேம்படுத்தியவாறு சேவை வழங்கலை விரைவுபடுத்துவதற்கும் வழிகோலுகிறது. Telco Cloud Automation இப்போது பணிச்சுமை இடத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் உகந்த உள்கட்டமைப்பு வள ஒதுக்கீட்டை வழங்குவதற்கும் உள்கட்டமைப்பு மற்றும் Containers-as-a-Service (CaaS) நிர்வகிப்பு தன்னியக்கமயமாக்கத்திற்கு உதவுகிறது. திறன் தேவைப்படும் போதெல்லாம் zero-touch-provisioning (ZTP) மூலம் 5G மற்றும் தொலைதொடர்பாடல் edge வலையமைப்பு விரிவாக்கங்களையும் இது கணிசமாக அளவில் எளிதாக்குகிறது.

தொடர்பாடல் சேவை வழங்குனர்களால் வலையமைப்பு செயல்பாடுகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக, VMware சமீபத்தில் VMware Telco Cloud Automation இற்கு உதவுவதற்காக Ready for Telco Cloud program ஐ விரிவுபடுத்தியுள்ளது. VMware Telco Cloud Platform அறிமுகத்துடன் வலையமைப்பு செயல்பாடுகளை வரிசைப்படுத்துவதற்கான தயார்நிலையை VMware மேலும் விரிவுபடுத்துகிறது. container அடிப்படையிலான வலையமைப்பு செயல்பாடுகளுக்கு பணி நிரலை நீட்டிப்பதுடன், இந்த பணிச்சுமைகள் VMware இன் Cloud Native stack மற்றும் தன்னியக்கமயமாக்கம் ஊடாக (Automation stack) இலகுவாக்கப்படுகின்றன.  சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள Network Functions விரைவாக உள்வாங்கப்பட்டு VMware Telco Cloud Platform இல் வரிசைப்படுத்தப்படுவதை தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் எதிர்பார்க்கலாம். அத்துடன் தொடர்பாடல் சேவை வழங்குனர்களின் நேரத்தை வருமானமீட்டும் முயற்சிகளுக்கு விரைவுபடுத்தவும் முடியும். இன்று வரை, நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக 35 க்கும் மேற்பட்ட கூட்டாளர்கள் 180 க்கும் மேற்பட்ட சான்று அங்கீகாரங்களைப் பெற்றுள்ளனர்.

மெய்நிகர் மற்றும் பௌதிக வலையமைப்புக்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நேர தன்னியக்க உத்தரவாத தீர்வான Telco Cloud Operations தொடர்பிலும் VMware அறிவித்துள்ளது. விரைவான நுண்ணறிவு, குறைந்த செலவுகள் மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக SD-WAN உட்பட வலையமைப்பின் பல அடுக்குகளில் முழுமையான கண்காணிப்பு மற்றும் செயல்திறன் நிர்வாகத்தை இத்தீர்வு வழங்குகிறது. இது கணினி கற்றல் அடிப்படையிலான செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் செயல்திறன்மிக்க உறுதிப்பாட்டிற்கான தெளிவான அறிக்கையிடல் விபரப் பலகணிகளை (dashboard) ஒருங்கிணைக்கிறது. Radio Access Networks (RANs) களுக்கான நுண்ணறிவு கொண்ட தன்னியக்கமயமாக்கத்தை வழங்கும் VMware இன் Uhana தீர்வின் துணை அனுகூலத்துடன், தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் தங்கள் ஒட்டுமொத்த வலையமைப்பிலும் விரிவான செயல்பாட்டுத் தன்மையைக் கொண்டிருக்கலாம்.

# # #


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *