தொழில்சார் IT வாழ்க்கைக்கான படிக்கல்லாக அமையும் BCS Professional Graduate Diploma in IT
Summary
தகவல் தொழில்நுட்ப கற்கைகளை வழங்கும் பட்டய கல்வியகமான British Computer Society (BCS), சர்வதேச உயர் கல்வித் தகைமைகள் (HEQ) மூலமாக கல்வி மற்றும் கணினி பயிற்சியை ஊக்குவித்து, மேம்படுத்தும் தனது நோக்கத்துடன், இதுவரை உள்நாட்டிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் 10,000 இற்கும் அதிக இலங்கை மாணவர்களை வலுவூட்டியுள்ளது. BCS ஓர் […]
தகவல் தொழில்நுட்ப கற்கைகளை வழங்கும் பட்டய கல்வியகமான British Computer Society (BCS), சர்வதேச உயர் கல்வித் தகைமைகள் (HEQ) மூலமாக கல்வி மற்றும் கணினி பயிற்சியை ஊக்குவித்து, மேம்படுத்தும் தனது நோக்கத்துடன், இதுவரை உள்நாட்டிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் 10,000 இற்கும் அதிக இலங்கை மாணவர்களை வலுவூட்டியுள்ளது. BCS ஓர் அரச பட்டயத்தைக் கொண்டுள்ளதுடன், இது BCS இனை ஒரு சுயாதீனமான தொழில்சார் அமைப்பாக அடையாளப்படுத்துகிறது. இதனை வைத்திருப்பவர் IT துறையில் மிக உயர்ந்த தொழில்சார் திறன், நடத்தை மற்றும் நெறிமுறையான நடைமுறைகளை முன்னெடுப்பவராக கருதப்படுகின்றார். IT இல் சர்வதேச HEQ, பிரித்தானிய அரசாங்கத்தின் தராதரங்கள் மற்றும் பரீட்சைகள் ஒழுங்குபடுத்தல் அலுவலகத்தால் (Ofqual) மிக உயர்ந்த தரத்தை பேணும் பொருட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
முழு உலகமும் பழைய தத்துவங்களை விட்டு டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்வதுடன், இந்த மாற்றத்தில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பம் இயலுமைப்படுத்தப்பட்ட பாதைகள் தொழில்துறைகளில் வளர்ச்சியை முன்னெடுப்பதுடன் சுகாதாரப் பாதுகாப்பு, விதிமுறைசாரா பொருளாதாரம், உலகளாவிய சேவைத் தொழில் உற்பத்தி, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் பங்களிப்பு செய்யும். இளைஞர்களும், வயதானவர்களும் புதிய தொழில்நுட்பங்களைத் தழுவி, அவர்களின் வாய்ப்புகளுக்காக IT இன் மதிப்பை அங்கீகரிக்கின்றனர். IT இல் ஒரு தொழில்சார் தகுதியானது மென்பொருள் பொறியியல், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, IT ஆலோசனை, இன்டர்நெட் ஒஃப் திங்ஸ், செயலி / இணைய டெவலப்பிங், வலையமைப்பு நிர்வாகம், தரவு விஞ்ஞானம், கிளவுட் கட்டமைப்பு மற்றும் பல வழிகளைத் திறக்கும்.
IT துறையில் தொழிலைக் கட்டியெழுப்ப உறுதியான அடித்தளத்தை வழங்கும் அதி உயர் தராதரத்தில் கல்வி கற்க எதிர்ப்பார்க்கும் மாணவர்களுக்காக IT இல் சர்வதேச HEQ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அலகு ரீதியான கட்டமைப்பு மாணவர்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ கல்வி கற்க அனுமதிக்கிறது. IT இல் சான்றிதழ், IT இல் டிப்ளோமா மற்றும் IT இல் தொழில்சார் பட்டதாரி ஆகிய 3 தர நிலைகளாக சர்வதேச HEQ பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மட்டமும் மென்பொருள் அபிவிருத்தி, கணினி வலையமைப்புகள், மற்றும் தரவுத் தள அமைப்புகள் போன்ற IT இல் தனித்தனியான ஆனால் தொடர்புடைய அலகுகளை விரிவாக உள்ளடக்கியது. IT இல் சிறப்புத் திறன்களை பெற உதவும் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை அலகுகள் மற்றும் தெரிவு செய்து கொள்ளக் கூடிய அலகுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.பாடத்திட்டங்கள், பயிற்சி ஆவணங்கள், பாடநெறி வழிகாட்டுதல் மற்றும் தேவையான கற்றல் நேரங்களின் வழிகாட்டுதல்கள் போன்ற தகவல்களை bcs.org/heq இல் பெற்றுக்கொள்ளலாம்.
உலகளாவிய தொற்றுநோயுடன் நாட்டின் தற்போதைய நிலைமைகளையும் BCS உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும் தடையற்ற கல்வியை வழங்குவதற்காக, அங்கீகாரம் பெற்ற பயிற்சி வழங்குநர்கள் பதிவுகளைத் திறந்துள்ளதுடன், மாணவர்கள் 2021 மே பரீட்சைக்கு ஒன்லைன் மற்றும் இலத்திரனியல் கற்றல் தளங்கள் ஊடாக தோற்ற வசதிகளை மேற்கொள்வதுடன், 2020 நவம்பர் பரீட்சை அமர்வினை தவற விட்ட மாணவர்கள் 2021 மே மாதம் பரீட்சைக்கு தோற்றுவதற்காக தயார்படுத்தும் பொருட்டு மீட்டல் வகுப்புக்களை நடாத்தி அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கின்றது.
பரீட்சைகள் மற்றும் சான்றிதழ்களுடன், பொது நன்மைக்காக கணினியியலில் கல்வி மற்றும் பயிற்சியை ஊக்குவிப்பதுடன், மேம்படுத்தும் ஒரே நோக்கத்துடன் இணைந்திட IT நிபுணர்களின் சிறப்பான வலையமைப்பைக் கொண்ட ஒரு உறுப்பினர் அமைப்பும் BCS ஆகும். ஒரு HEQ மாணவர் உலகளவில் 70,000 உறுப்பினர்களை இணைக்கும் BCS சமூகத்தில் தானாகவே உறுப்பினராகிறார். உறுப்பினர் தளமான MyBCS, தொழில் ஆலோசனை, 1000 க்கும் மேற்பட்ட மின் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் கற்கை நெறிகள், வழிகாட்டுதல் மற்றும் நவீன அமைப்புகள், சரியான வாய்ப்புகளுக்கான மாணவர்களின் தேடலுக்கான உதவியாக செய்திகள் மற்றும் தகவல்கள், இலவச மின் புத்தகங்கள் அமைப்புகள் உட்பட மேலும் பலவற்றைக் கொண்டுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை bcs.org/join இல் பெறலாம்.