Tamil

தெற்காசியவின் தீவுச் சந்தைகளின் சிறந்ததைத் தேடும் 4 ஆவது PropertyGuru Asia Property Awards (Sri Lanka)

Summary

கடந்த வருடம் மூன்றாவது முறையாகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற PropertyGuru Asia Property Awards (Sri Lanka), 2020 ஆம் ஆண்டுக்கான நிகழ்வின் முக்கிய திகதிகளை அறிவித்துள்ளது. இந்த 4ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards (Sri Lanka), கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தன்னை மீளக்கட்டமைத்து வரும் செயன்முறையில் இலங்கை ஈடுபட்டுள்ள […]

கடந்த வருடம் மூன்றாவது முறையாகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற PropertyGuru Asia Property Awards (Sri Lanka), 2020 ஆம் ஆண்டுக்கான நிகழ்வின் முக்கிய திகதிகளை அறிவித்துள்ளது.

இந்த 4ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards (Sri Lanka), கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தன்னை மீளக்கட்டமைத்து வரும் செயன்முறையில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையில், ஆசியாவின் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் விருது வழங்கும் நிகழ்வானது தீவு தேசத்துக்கு திரும்புவதைக் குறிக்கின்றது.

நாட்டில் உள்ள சிறந்தவற்றில் சிறந்த ஆதனங்கள் மற்றும் டெவலப்பர்களை கொண்டாடும் இந்த black-tie gala இராப்போசன விருந்து மற்றும் விருது வழங்கும் நிகழ்வானது 17 ஜுலை 2020 வெள்ளிக்கிழமையன்று, கொழும்பு ஷங்ரில்லாவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக பொதுமக்கள் மே 1 வரை பரிந்துரைகளை சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டு நிகழ்வின் முக்கிய தினங்கள் வருமாறு:

ஜனவரி 21 அன்று பரிந்துரைகள் மற்றும் பதிவுகள் ஆரம்பமாகின. மே 1 வரை பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், பதிவுகள் மே 8 நிறைவடைகின்றன. ஜூன் 8 முதல் 19 வரையான காலப்பகுதியில் தள பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், ஜூன் 30 அன்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதேவேளை, ஜூலை 17 அன்று கொழும்பில் Gala இராப்போசனம் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதுமட்டுமன்றி நவம்பர் 20 அன்று தாய்லாந்தின் பேங்கொக்கில் மாபெரும் இறுதி Gala நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *