Tamil

சிறப்பாக செயலாற்றியவர்களை அடையாளப்படுத்திய மல்டிலக் ‘விநியோகஸ்தர் மாநாடு – 2021’

Summary

கடந்த 40 வருடங்களாக இலங்கையின் வர்ணப்பூச்சு துறையில் முன்னோடியாக திகழும் மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் முன்னணி வர்ணப்பூச்சாக மல்டிலக் வர்த்தகநாமம் விளங்குகிறது. உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளர்களிடையே மல்டிலக் முன்னோடி என்பது நீங்கள் அனைவரும் நன்கறிந்த விடயமாகும். அத்தகையரூபவ் மல்டிலக் வர்த்தகநாமத்தை உலகறியச் செய்வதில் அளப்பரிய பங்காற்றிய விநியோகஸ்தர்களை அடையாளப்படுத்தும் வகையில் மல்டிலக் […]

கடந்த 40 வருடங்களாக இலங்கையின் வர்ணப்பூச்சு துறையில் முன்னோடியாக திகழும் மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் முன்னணி வர்ணப்பூச்சாக மல்டிலக் வர்த்தகநாமம் விளங்குகிறது. உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளர்களிடையே மல்டிலக் முன்னோடி என்பது நீங்கள் அனைவரும் நன்கறிந்த விடயமாகும். அத்தகையரூபவ் மல்டிலக் வர்த்தகநாமத்தை உலகறியச் செய்வதில் அளப்பரிய பங்காற்றிய விநியோகஸ்தர்களை அடையாளப்படுத்தும் வகையில் மல்டிலக் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வட மாகாணத்திற்கான ´விநியோகஸ்தர் மாநாடு – 2021´ மார்ச் மாதம் 18 ஆந் திகதி யாழ். வலம்புரி ஹோட்டலில் இடம்பெற்றது.

மல்டிலக் நிறுவனத்தின் வெற்றியில் பெரும் பங்காற்றிய விநியோகஸ்தர்களின் கடின உழைப்புரூபவ் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் குழும பொது முகாமையாளர் பேராசிரியர். அலி அஹலம் நவாஸ்ரூபவ் மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சஜார்ட் சலிஹீன்;ரூபவ் மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் பிராந்திய விற்பனை முகாமையாளர் அப்துல் பாத்தாஹ் மற்றும் மல்டிலக் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த எமது பெருமைக்குரிய விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் மல்டிலக் நிறுவனத்தைச் சேர்ந்த முகாமைத்துவக் குழுவினரால் நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் செயற்பாடுகள் பிராந்தியத்தில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டன. மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்காற்றிய வட மாகாணத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர்களை கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் விநியோகஸ்தர்கள் மத்தியில் நிறுவனத்தின் நிலைபேறுதன்மைரூபவ் நம்பிக்கை கட்டியெழுப்பல் மற்றும் நீண்டகால சந்தைப் பெறுமதி போன்றவை குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

விநியோகஸ்தர்களின் அளப்பரிய பங்களிப்பு அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் வட மாகாணத்திற்கான தங்க விருதுகள் பிரிவில் சிட்டி ஹார்ட்வேயாரைச் சேர்ந்த எம்.எஸ். நஸருடீன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இரண்டாமிடத்தை கந்தவேலன் டிரேடர்ஸ்ஸைச் சேர்ந்த கே. நிரஞ்சன் உம் மூன்றாமிடத்தை வாமணன் பெயிண்ட் சென்டரைச் சேர்ந்த ஏ. வாமணன் உம் வென்றெடுத்தனர்.

மேலும் வெள்ளி விருதுகள் பிரிவில் வவுனியா ஹார்ட்வேயரைச் சேர்ந்த எச்.எம்.சலீம் வெற்றியீட்டியதுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கான வெள்ளி விருதுகளை முறையே கணேஷன் ஹார்ட்வேயரைச் சேர்ந்த டி. சுதர்ஷன் மற்றும் றோயல் ஹார்ட்வேயரைச் சேர்ந்த எச்.எம். ஜியாத் உம் வென்றனர். வெண்கலப் பிரிவில் வெற்றியாளருக்கான விருதை ஹரே கிருஷ்ணா ஹார்ட்வேயாரைச் சேர்ந்த எஸ்.தயாபரன் வென்றதுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே சுமண் ஹார்ட்வெயார் அண்ட் எலட்க்ரிகல்ஸைச் சேர்ந்த எஸ்.சுமன்ராஜ் மற்றும் விக்னேஸ்வரா பெயிண்ட்ஸ் அண்ட் எலட்க்ரிகல்ஸைச் சேர்ந்த எம். சதீஸ்குமார் ஆகியோர் வென்றெடுத்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் குழும பொது முகாமையாளர் பேராசிரியர். அலி அஹலம் நவாஸ் ´சர்வதேச தரத்திலமைந்த மல்டிலக் வர்ணப்பூச்சு வெற்றியில் முக்கிய பங்காளர்களான விநியோகஸ்தர்களை கௌரவப்படுத்தும் இந்நிகழ்வுக்கு உங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மல்டிலக் என்பது மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் உள்நாட்டு உற்பத்தியாக உள்ளதுடன்ரூபவ் எமது உற்பத்திகளுக்கென சந்தையில் பிரத்தியேகமான ஒரு இடத்தைக் கொண்டுள்ளோம். உங்கள் கடின உழைப்பு முயற்சி அர்ப்பணிப்பு எமது உற்பத்தி மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் எமது உற்பத்திகளை பாவனையாளர்களிடையே கொண்டு செல்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு ஆகியவையே மல்டிலக் வர்த்தகநாமத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளன.

எமது நிறுவனத்திற்கு மட்டுமன்றி பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பு வழங்கி வரும் பெருமைக்குரிய உங்களை கௌரவப்படுத்தும் வகையிலேயே இவ்விருதுகள் வழங்கும் நிகழ்வினை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்´ என்றார்.

´ஆசியாவிலேயே எவ்வித இரசாயனங்களும் அற்ற முற்றிலும் சூழலுக்கு தீங்கிழைக்காத மூலப்பொருட்களினால் உற்பத்தி செய்யப்படும் சர்வதேச தரத்திலமைந்த வர்ணப்பூச்சுத் தெரிவாக மல்டிலக் உள்ளது. எமது தரம் வாய்ந்த உற்பத்திகளை மிகுந்த நம்பிக்கையுடன் விநியோகஸ்தர்கள் எமது பாவனையாளர்கள் கைகளுக்கு கொண்டு சென்றனர். ஆகவேதான் எமது உற்பத்திகள் பல்வேறு விருதுகளை வென்றெடுத்துள்ளன. எனினும் வட மாகாணத்தைப் பொறுத்தவரை ஆரம்ப கட்டங்களில் எமது உற்பத்தித் தெரிவுகளுக்கான விற்பனை மந்தமாகவே நிலவியது. மக்கள் மத்தியில் எமது உற்பத்திகள் பற்றிய அறிவு மிகக்குறைவாக இருந்தமையே இதற்கு காரணமாகும். எனினும் எமது நிறுவனத்தின் பங்காளர்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்பு சிறந்த பிரச்சார உத்திகள் தயாரிப்பு பற்றிய தெளிவான அறிவு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே மிகக்குறுகிய காலப்பகுதியினுள் வடபகுதி மக்களிடையே எமது உற்பத்திகளுக்கென பெரும் மதிப்பையும் கேள்வியையும் பெற்றுக்கொடுத்தது. குறிப்பாக ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் குறைந்தளவு விற்பனையாகிய எமது உற்பத்தி தெரிவுகளில் ஒன்றான ப்ரீமியர் பெயிண்ட் ((Premier paint), தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகளவு விற்பனையாகும் தெரிவாக மாற்றமடைந்துள்ளது. இந்த வெற்றியில் அளப்பரிய பங்காற்றிய உங்களுக்கு எமது நிறுவனத்தின் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளையும் கௌரவத்தையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்´ என மேலும் அவர் தெரவித்தார்.

மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான சஜார்ட் சலிஹீன் கருத்து தெரிவிக்கையில் ´கடந்த 2020 களிலேயே நான் இந்நிறுவனத்தின் வடக்கு பிராந்தியத்துடன் இணைந்து கொண்டேன். அச்சமயத்தில் வாடிக்கையாளர்கள் மிகக்குறைவாக இருந்ததுடன் மல்டிலக் விற்பனையும் மந்தமாகவே காணப்பட்டது. வட பிராந்தியத்திலுள்ள பாவனையாளர்கள் தரமான உற்பத்திகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வத்தை காட்டினர். எனவே, ப்ரீமியர் வர்ணப்பூச்சை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் எமது குழுவோடு இணைந்து கடுமையாக பணியாற்றி வர்ணப்பூச்சுடன் தொடர்புடைய தீர்வுகளை உடனுக்குடன் விநியோகஸ்தர்களுக்கும் பாவனையாளர்களும் வழங்கி வருகிறோம். வட மாகாணத்தில் மல்டிலக் வர்த்தகநாமத்தினை முதல் தர வர்ணப்பூச்சாக உருவாக்குவதே எனது குறிக்கோளாகும். எமது நிறுவனத்தின் குழுவினர் விநியோகஸ்தர்களாகிய உங்களுடன் கைகோர்த்து தேவையான ஆதரவை வழங்கி தொடர்ந்து எமது நிறுவனத்தின் இலக்குகளை அடைய எதிர்பார்த்துள்ளோம்´ என்றார்.

மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனம் Quality Management System (QMS), Sri Lanka Standards (SLS) மற்றும் ISO 9001:2008 சான்றிதழ்களை வென்றுள்ளது. தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் மக்களின் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் புத்தாக்க தயாரிப்புகளையும் முன்னெடுத்து வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரேயொரு வர்ணப்பூச்சு தெரிவான மல்டிலக் அவுஸ்திரேலியா இந்தியா மாலைதீவு மியன்மார் சீசெல்ஸ் பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *