Tamil

இலங்கையர்களுக்கு உள்நாட்டு மொழியிலான ஸ்மார்ட்போன் கீபோர்ட்களை அறிமுகப்படுத்த Bobble AI உடன் கைகோர்த்த HUTCH

Summary

இலங்கையில் முதற்தடவையாக உலகளவில் மில்லியன் கணக்கான பாவனையாளர்களினால் நம்பப்படும் நவீன ஸ்மார்ட்போன் கீபோர்ட் தீர்வுகளை வழங்கும் உலகின் முதல் உரையாடல் ஊடக தளமான Bobble AI உடன் கைகோர்ப்பதாக HUTCH இன்று அறிவித்தது. இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் Bobble ஸ்மார்ட்போன் kiipoorttin தனித்துவமான அம்சங்களை அனுபவித்து மகிழமுடியும். இது […]

இலங்கையில் முதற்தடவையாக உலகளவில் மில்லியன் கணக்கான பாவனையாளர்களினால் நம்பப்படும் நவீன ஸ்மார்ட்போன் கீபோர்ட் தீர்வுகளை வழங்கும் உலகின் முதல் உரையாடல் ஊடக தளமான Bobble AI உடன் கைகோர்ப்பதாக HUTCH இன்று அறிவித்தது.

இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் Bobble ஸ்மார்ட்போன் kiipoorttin தனித்துவமான அம்சங்களை அனுபவித்து மகிழமுடியும். இது உள்நாட்டு மொழிகளில் தட்டச்சு செய்தல் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்), தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் அற்புதமான திரைப்பட GIFsகள் (சிங்களம் மற்றும் தமிழ்), Animated BigMojis™ மற்றும் பயணத்தின் போது இடைஞ்சல் இல்லாமல் டைப் செய்யும் அனுபவத்தை வழங்க உதவும் வலுவான வொய்ஸ் டூ டெக்ஸ்ட் அம்சம் (சிங்களம் மற்றும்  தமிழ்) போன்ற வசதிகள் பலவற்றை வழங்குகின்றது.

பாவனையாளர்களுக்கு புதிய செட் மற்றும் மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு தனிப்பயனாக்கப்பட்ட கீபோர்ட் தீம்கள் மற்றும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் போன்றன வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மொபைல் செட் செயலிகள் மற்றும் பிரவுசர்களிலும் இந்த கீபோர்ட் சிறப்பாக செயல்படுவதால் குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் சிறந்த ஈடுபாட்டை வளர்ப்பதற்கு இந்த ஸ்மார்ட் பரிந்துரை உதவும்.

Bobble AI கீபோர்ட்டானது, Play Store இல் உறுதியான 4.5 நட்சத்திர தரப்படுத்தல் மற்றும் ஏற்கனவே 50,000 செயற்படு நிலையில் உள்ள பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

மேலும், Bobble AI கீபோர்ட்டானது வணிகச்சூழலில் உள்ள பங்காளர்களுக்கும் தங்களது டிஜிட்டல் சேவைகளை கீபோர்ட்டின் திறன்களையும், வரவேற்பையும் பயன்படுத்தும் பிரத்தியேக வர்த்தகநாம கூட்டாண்மை மூலம் மேம்படுத்துவதற்கான சிறப்பான வாய்ப்புகளை வழங்குவதுடன், இது சந்தாதாரர்களுக்கும் வணிகங்களுக்கும் பாரிய பெறுமதியை உருவாக்குகிறது. இந்த பங்குடமையானது இலங்கையில் உள்ள டிஜிட்டல் வணிகச்சூழல் அமைப்பினுள் ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயும் Bobble AI இன் தொலைநோக்குப் பார்வைக்கு இணைவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான Lemon Advisors UK Ltd மூலமாகவே Hutch Sri Lanka மற்றும் Bobble AI இடையிலான இந்த மூலோபாய பங்குடமை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில், ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய பசுபிக் மற்றும் மெனா பிராந்தியத்தில் தனது வணிக வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் பலப்படுத்துவதற்கும்  Lemon Advisors உடனான தனது பங்குடமை தொடர்பில் Bobble AI அறிவித்தது. Lemon Advisors UK, 38 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி வருவதுடன், தொலைத்தொடர்பாடல் மற்றும் ஊடகம், ஃபின்டெக், சுகாதாரம், ஸ்பேஸ்டெக் மற்றும் ஏவியேஷன் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த பங்குடமை குறித்து HUTCH பிரதிநிதியான, பங்குடமை மற்றும் கூட்டமைப்புகளுக்கான பிரதி பொது முகாமையாளர் பிராஸ் மர்கார் கருத்து தெரிவிக்கையில், “வாடிக்கையாளர் ஈடுபாட்டுத் தீர்வுகளில் முன்னணி இடத்தை வகிக்கும் ஒரு தனித்துவமான தளமான Bobble AI உடன் பங்குடமையில் இணைவது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கீபோர்ட் என்பது இன்றைய உலகில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு சாதனத்தினதும் வாடிக்கையாளருடான ஈடுபாட்டு கருவி என்பதுடன் உள்நாட்டு மொழி தொழிற்பாடுகள் கிடைக்கின்றமையும் எங்கள் சந்தாதாரர்களுடனான ஈடுபாட்டை கணிசமாக அதிகரிக்க உதவும் என்பதையும் மறுப்பதற்கில்லை,” என்றார்.

Bobble AI இன் ஸ்தாபகரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான அங்கித் பிரசாத், “உலகம் முழுவதும் உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடனான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கான Bobble AI இன் தொலைநோக்குப் பார்வைக்கு இணைவாக HUTCH உடனான பங்குடமை உள்ளது. ஸ்மார்ட்போன் ஊடுருவல், விரைவான இணையப் பெருக்கம், துரிதமான தொழில்நுட்ப அடைவு போன்ற உலகளாவிய போக்குகள் வணிகங்கள் அவற்றின் இறுதி நுகர்வோருடன் ஒரு ஆழமான தொடர்பை உருவாக்கி, அவற்றின் சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாக அதாவது விரல் நுனிக்கே கொண்டு வந்து சேர்ப்பதற்கான தேவையை உருவாக்கியுள்ளன.”

அங்கித் மேலும் தெரிவிக்கையில்,”இலங்கையில் உள்ள முழு டிஜிட்டல் வணிகச்  அமைப்பின் மகத்தான ஆற்றலைப் பயன்படுத்தவும், தரவு நுண்ணறிவு, சூழ்நிலைக்கேற்ற விளம்பரம் மற்றும் வர்த்தகநாம சந்தைப்படுத்தல் போன்ற பிரிவுகளை வழங்கும் எங்கள் தனித்துவமான வணிக மாதிரிகள் மூலம் உள்ளூர் வணிகங்கள், வர்த்தகநாமங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குநர்களுடனான ஒத்துழைப்புகளை ஆராயவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *