Tamil

காத்திரமான அறிக்கையை வெளியிடும் British Council – ‘காலநிலை மாற்றம் தொடர்பில் இளைஞர்கள்: ஒரு கருத்தாய்வு’

Summary

எதிர்வரும் வருடங்களில் காலநிலை மாற்றமானது இலங்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமையுமென 66% பங்கேற்பாளர்கள் கருதுகின்றனர் குறிப்பாக, காலநிலை மாற்றமானது வரவிருக்கும் மிகப் பெரிய ஆபத்து என, இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பத்தில் ஆறு பேர் கருதுகிறார்கள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாத்திரத்தை தம்மால் வகிக்க முடியுமென பங்கேற்பாளர்களில் 70% ஆனோர் நம்புகிறார்கள்; […]

  • எதிர்வரும் வருடங்களில் காலநிலை மாற்றமானது இலங்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமையுமென 66% பங்கேற்பாளர்கள் கருதுகின்றனர்
  • குறிப்பாக, காலநிலை மாற்றமானது வரவிருக்கும் மிகப் பெரிய ஆபத்து என, இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பத்தில் ஆறு பேர் கருதுகிறார்கள்
  • காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாத்திரத்தை தம்மால் வகிக்க முடியுமென பங்கேற்பாளர்களில் 70% ஆனோர் நம்புகிறார்கள்; இது ஒரு ஊக்கமளிக்கும் கருத்தாகும்
  • இது தொடர்பாக அறியும் வளங்களை அணுகுவது மிகக் குறைவாக அல்லது முற்றாக இல்லையென்பது ஒரு மிகப்பெரிய சவாலாக 24% இற்கும் அதிகமான இளைஞர்கள் கருதுகின்றனர். காலநிலை நடவடிக்கைகளை அடையக் கூடிய திறன் வள ஆதாரங்களை அணுக 62.5% ஆனோரால் முடியவில்லை என்பது மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலாக அமைகிறது

இலங்கை போன்ற வளரும் நாடுகளில் காலநிலை மாற்ற பாதிப்புகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் 18 – 35 வயது இளைஞர்கள் உள்ளனர் என்றால் அது மிகையாகாது. எனவே இளைஞர்கள் எதிர்காலத் தலைவர்களாகவும், நாளைய முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பதைப் பார்க்கும்போது, ​​அவர்களின் அணுகுமுறைகளும் செயல்களும், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் அதனை தழுவல் ஆகியவற்றின் மூலம் உலகம் எவ்வாறு அதனை எதிர்கொள்ளும் என்பதை நிரூபிக்கும், காலநிலை மாற்றம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கை பற்றிய விடயங்கள் தொடர்பில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஆழமான புரிதலைப் அறிவது மிகவும் முக்கியமானதாகும்.

காலநிலை மாற்றம் மற்றும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கையில் உள்ள இளைஞர்களின் கருத்துக்களைப் அறிந்துகொள்வதற்காக, British Council ஆனது, 18-25 வயதுக்குட்பட்ட 1,000 இளைஞர்களிடம் விரிவான ஆய்வொன்றை நடாத்தியது. அத்துடன், 26-35 வயதுடைய இளைஞர்களுடன், கவனம் செலுத்தப்பட்ட குழு கலந்துரையாடல்கள் (FGDs)  10 மற்றும் 25 இற்கும் மேற்பட்ட கொள்கை வகுப்பாளர்கள், காலநிலை தொடர்பான இளம் தலைவர்கள் உள்ளிட்ட ஏனைய முக்கிய பங்காளர்களுடனான நேர்காணல் ஆகியன இதில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு அறிக்கை ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில், ‘காலநிலை செயற்பாட்டில் இளைஞர்கள் – இணையவழி மாநாடு (YCAVC) அரசாங்கத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் காலநிலை நடவடிக்கை தொடர்பில் செயற்படும் இளைஞர்களின் பங்களிப்புடன் பிரிட்டிஷ் கவுன்சிலால் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் (UNDP) இணைந்து உத்தியோகபூர்மாக மேற்கொள்ளப்பட்டது. இந்த இணையவழி மாநாடு, அதன் முக்கிய பங்காளர்களிடையே கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றங்களை அமைப்பதில் வெற்றிகரமாக பங்களித்ததுடன், அது தொடர்பான எதிர்கால பரிந்துரைகள் மற்றும் யோசனைகளுக்கும் வழிவகுத்தது. சுற்றாடல் அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டு, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய கூட்டுறவு அமைச்சுகள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் இலங்கையின் UNDP Global Youth Program நிகழ்ச்சி முகாமையாளருமான Lisa Whanstall ஆகியோரின்  பங்களிப்பு மற்றும் காலநிலை பாதிப்புக்கு எதிராக போராடும் நடவடிக்கைக்காக இளைஞர்களின் உச்ச பங்களிப்புடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. அத்துடன், காலநிலை மாற்ற தாக்கத்தை குறைப்பது தொடர்பில் பங்களிப்பு செய்யும் இளம் தலைவர்களின் வெற்றியையும் அது கொண்டாடியது.  இலங்கை அரசாங்கம், இங்கிலாந்து மற்றும் COP26 ஆகியவற்றால் வரையறை செய்யப்பட்டுள்ள, காலநிலை தொடர்பான செயற்பாடுகளின் முன்னுரிமைகளுக்கு இளைஞர்கள் எவ்வாறு திறன்பட பங்களிக்க முடியும் எனும் ஆய்வின் கண்டறிதல்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால பிரச்சினைகளை அடையாளம் காண்பது தொடர்பில் பிரதான பங்களார்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தரப்பமும் இதில் ஏற்படுத்தப்பட்டது.

Royal Commonwealth Society இன் காலநிலை தலைவர் அனோகா அபேரத்னே, இது தொடர்பில்  உத்வேகம் தரும் முக்கிய அமர்வில் கருத்து வெளியிட்டபோது, “காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கை மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானது என்பதுடன், அதை பற்றி சாதாரணமாக பேசுவது அல்லது ட்வீட் செய்து விட்டு இருப்பதிலும் அதனை செய்து காட்டுவது மிகவும் கடினமாகும். இம்மாநாட்டிற்குப் பின்னர், நமக்காகவும் நமது எதிர்காலத்துக்காகவும் உண்மையான பிரதிபலன்களை வழங்கக் கூடிய நடவடிக்கைகள் இடம்பெறுமென நான் நம்புகிறேன்.” என்றார்.

இந்த ஆய்வு, பிரிட்டிஷ் கவுன்சிலின் Climate Connection திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதுடன், இது கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி மூலம் காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021 நவம்பர் 01 முதல் 12 வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள, இங்கிலாந்து தலைமை வகிக்கும், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP26) இற்கு முன்னதாக இந்த மாநாடு இடம்பெறுகின்றது.

இந்த ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்த UNDP இன் இலங்கையின் துணை வதிவிடப் பிரதிநிதி மலின் ஹர்விக், “COVID-19 உலகெங்கிலும் உள்ள மக்களை, உலக வாழ்வின் பலவீனத்தை அனுபவிக்கச் செய்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். இலங்கையின் காலநிலை அம்சங்களை உணர்ந்து கொள்வது தொடர்பான UNDP இன் விரிவான பணியின் மூலம், இயற்கை தொடர்பான நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு இந்த மாற்றப் பாதையில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது அவசியமாகும். இந்நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட இளைஞர்களில் 70% ஆனோர், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பிரதிநிதிகளாக தங்களால் செயற்பட முடியுமென தெரிவித்தமை ஊக்கமளிப்பதாக அமைந்தது. எனவே உரிய மாற்றத்தை செயற்படுத்தும் பொருட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டுவோம்!” என்றார்.

இவ்வறிக்கையின் கண்டறிதல்களின் அடிப்படையில், இளைஞர்களின் அபிலாஷைகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பரிந்துரைகளை பயன்படுத்தி ‘உலகளாவிய இளைஞர் கடிதம்’ தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இக்கடிதம் நவம்பரில் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்துகொள்ளும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களின் நேரடி கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

British Council Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான Country Director, மர்யா ரஹ்மான் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “காலநிலை அவசரநிலை ஆனது, நமது பூமி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். எனவே பிரிட்டிஷ் கவுன்சில் ஆய்வானது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு இதில் முன்னுரிமை அளித்துள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இந்த ஆய்வானது கொள்கை அளவில் தேசிய செயல் திட்டத்தில் பங்களிக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த படைப்பாக அமையுமென நான் நம்புகிறேன், முக்கியமாக இதில் கண்டறியப்பட்ட விடயங்கள் காலநிலை மாற்ற உரையாடல்களில், இளைஞர்களின் குரல்களை இணைப்பதன் முக்கியத்துவம் பற்றிய வலுவான செய்தியை கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.” என்றார்.

#ENDS#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *