Tamil

SLT-Mobitel இற்கு ‘CALLER TUNES’ வசதியை வழங்கும் EVOKE

Summary

தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு பெறுமதி சேர் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்திவரும் இலங்கையின் பொழுதுபோக்கு வர்த்தக முன்னோடியான EVOKE INTERNATIONAL LIMITED ஆனது, SLT-Mobitel உடன் இணைந்து தொலைபேசி அழைப்பு ஒலிக்கான பின்னணி இசை ‘CALLER TUNE’ சேவையை வழங்குகிறது. இந்தச் சேவையானது SLT-Mobitel நிலையான வீட்டு தொலைபேசி வாடிக்கையாளர்கள், மாதாந்தம் ரூ. 30 மற்றும் […]

தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு பெறுமதி சேர் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்திவரும் இலங்கையின் பொழுதுபோக்கு வர்த்தக முன்னோடியான EVOKE INTERNATIONAL LIMITED ஆனது, SLT-Mobitel உடன் இணைந்து தொலைபேசி அழைப்பு ஒலிக்கான பின்னணி இசை ‘CALLER TUNE’ சேவையை வழங்குகிறது. இந்தச் சேவையானது SLT-Mobitel நிலையான வீட்டு தொலைபேசி வாடிக்கையாளர்கள், மாதாந்தம் ரூ. 30 மற்றும் வரிகள் செலுத்தி, தாங்கள் விரும்பும் இசையை அல்லது பாடலை அழைப்பாளர் ஒருவர் அழைப்பை மேற்கொள்ளும்போது அவருக்கு கேட்கும்வகையில் அமைத்துக்கொள்ள முடியும். பதிவு கட்டணமாக முதல் தடவை ரூ. 40 மற்றும் வரியை செலுத்தி இந்த சேவையை செயல்படுத்தலாம்.

இந்த சேவை அனைத்து நிலையான வீட்டு தொலைபேசி இணைப்புகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், 1259 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் (சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் அமைந்த தன்னியக்க குரல் IVR சேவை) மூலம் அதனை எளிதாக செயல்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ. 90 மற்றும் வரியை செலுத்தி ‘JUKEBOX’ (பாடல் பட்டியல் – PLAYLIST) எனும் தெரிவையும் மேற்கொள்ள முடியும்.  இதன்போது,  தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள பாடல்கள், உள்வரும் ஒவ்வொரு அழைப்புகளின் போதும் மாறி மாறி ஒலிக்க விடப்படும்.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த EVOKE INTERNATIONAL நிறுவனத்தின் ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் பணிப்பாளருமான லஹிரு விக்ரமசிங்க, “இந்த முயற்சி தொடர்பில் SLT-Mobitel உடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டாண்மையானது, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஒரு வெற்றிகரமானதாகும். ஏனெனில், நாம் காப்புரிமை பெற்றுள்ள இசைகளை பரந்த அளவிலான பயனர்களிடம் எடுத்துச் செல்ல இதன் மூலம் முடிகிறது. அத்துடன், SLT-Mobitel நிலையான வீட்டு தொலைபேசி வாடிக்கையாளர்களும் அவர்களின் அழைப்பாளர் கேட்கும் இசையை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எமது கூட்டாண்மையின் மூலம், இலங்கையின் முதற் தர இணைப்பு வழங்குநரான SLT-Mobitel – பொழுதுபோக்கின் முன்னணி வர்த்தகநாமமான Evoke உடன் இணைந்து, மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு நன்மையளிக்கும் வகையிலும், மகிழ்விப்பதற்குமான சேவையை வழங்குமென எதிர்பார்க்கிறோம்.

SLT இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையல், “எமது SLT-Mobitel நிலையான வீட்டு தொலைபேசி வாடிக்கையாளர்களுக்காக அழைப்பாளர் இசை (CALLER TUNE) சேவையை அறிமுகப்படுத்துவதானது, வீட்டு தொலைபேசி சேவையில் ஒரு மைல்கல்லாகும். இச்சேவையானது ஒரு தனித்துவமான அனுபவத்தையும், பொழுதுபோக்கிற்கு ஒரு பெறுமதியையும் சேர்க்கும் புத்தாக்கமான சலுகையையும் வழங்குகிறது. இது ஒரு புத்துணர்ச்சியூட்டும்  அனுபவமாகும்.

SLT-Mobitel CALLER TUNE சேவை பற்றிய மேலதிக தகவலுக்கு, 1259 இனை அழைக்கவும் அல்லது பார்வையிடவும்: https://slt.lk/en/telephone/vas/callertune

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *