Tamil

ஐ.டி.எச் இல் ஒரு மூலக்கூறு கண்டறியும் ஆய்வகத்தை நிறுவுவதற்கு தனியார் துறை துணைபுரிகிறது.

Summary

தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் (ஐ.டி.எச்) புதிய மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் ஒன்றினை ஏப்ரல் 28ம் திகதி, 2020 அன்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க அவர்கள் திறந்து வைத்தார். மெல்ஸ்டாகார்ப் பி.எல்.சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, டொய்ச் வங்கி (Deutsche Bank) மற்றும் தெற்காசியா கேட்வே டெர்மினல்கள் (பிரைவேட்) […]

தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் (ஐ.டி.எச்) புதிய மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் ஒன்றினை ஏப்ரல் 28ம் திகதி, 2020 அன்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க அவர்கள் திறந்து வைத்தார்.

மெல்ஸ்டாகார்ப் பி.எல்.சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, டொய்ச் வங்கி (Deutsche Bank) மற்றும் தெற்காசியா கேட்வே டெர்மினல்கள் (பிரைவேட்) லிமிடெட் (South Asia Gateway Terminals (Pvt) Ltd) மற்றும் இலங்கை மீன்வளக் கழகத்தின் நலன்புரி சங்கம் மற்றும் திறப்பு விழாவில் பிரதிநிதித்துவம் வகித்த திரு. ஷம்மி சில்வா போன்ற தனியார் துறை நன்கொடையாளர்களால் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

கோவிட் -19 பரவலை தொடர்ந்து இலங்கையின் சோதனை திறனை அதிகரிக்கும் அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது. ஒரு தற்காலிக ஆய்வக வசதி முதலில் ஐ.டி.எச் இல் நிறுவப்பட்டு 2020 மார்ச் 29 முதல் நிரந்தர வசதி தொடங்கப்படும் வரை அது செயல்படும். இந்த வசதி எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.டி.எச் இல் நிறுவப்பட்டுள்ள மூலக்கூறு கண்டறியும் ஆய்வகமானது, சோதனை திறனை எளிதாக்கியுள்ளது, சோதனை நேரங்களை குறைத்து, ஐ.டி.எச்-க்குள் சோதனைகளை செயலாக்க உதவுகிறதினால், ஐ.டி.எச் இல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருத்துவ பராமரிப்புகளையும் மேம்படுத்துகிறது. எதிர்மறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை உடனடியாக வெளியேற்ற உதவும் அதே வேளையில், தொற்றுப் பொருள்களை அகற்றுவதிலும், கொண்டு செல்வதிலும், சுற்றியுள்ள உயிர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைத் தடுக்கவும் இந்த ஆய்வகம் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *