Tamil

மேம்பட்ட அனுபவத்தை வழங்க கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH

Summary

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான வாடிக்கையாளர் சேவை மையத்தை அண்மையில் மேம்படுத்தியது. இந்த சம்பிரதாயபூர்வ நிகழ்வில் திருமதி. யோகலதாகினி திருக்குமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன், HUTCH […]

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான வாடிக்கையாளர் சேவை மையத்தை அண்மையில் மேம்படுத்தியது. இந்த சம்பிரதாயபூர்வ நிகழ்வில் திருமதி. யோகலதாகினி திருக்குமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன், HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.திருக்குமார் நடராசா மற்றும் HUTCH Sri Lanka வின் முகாமைத்துவ உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

HUTCH அண்மையில் நாடு முழுவதும் தனது உலகத்தரம் வாய்ந்த 4G வலையமைப்பை செயற்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கும் இருப்பதற்கு வலுவூட்டியது. அதன் 2G மற்றும் 3G வலையமைப்புகளின் விரிவாக்கம் உள்ளிட்ட இந்த பாரிய வலையமைப்பு விரிவாக்கம், HUTCH தனது வாடிக்கையாளருக்கு சிறந்த வலையமைப்பு அனுபவத்தை வழங்க உதவியுள்ளதுடன், அவர்களின் முக்கிய சிக்கல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட மலிவான மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளின் வரிசையை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *