இலவச காப்புறுதி திட்டத்தை வழங்கி தொழிற்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் Ideal Motors மற்றும் Ideal First Choice
Summary
Ideal Motors Pvt Ltd மற்றும் அதன் துணை நிறுவனமான Ideal First Choice Pvt Ltd (Ideal Group இன் ஓர் அங்கம்) ஒரு இலவச முன்னோடி காப்புறுதி வெகுமதி திட்டத்தை அறிவித்துள்ளது. இத் தொழிற்துறையின் முன்னோடியான இந்த முயற்சியானது Ideal Motors மற்றும் Ideal First Choice வேலைத்தளங்கள் இரண்டிலிருந்தும் தொடர்ச்சியாக பராமரிப்பு […]
Ideal Motors Pvt Ltd மற்றும் அதன் துணை நிறுவனமான Ideal First Choice Pvt Ltd (Ideal Group இன் ஓர் அங்கம்) ஒரு இலவச முன்னோடி காப்புறுதி வெகுமதி திட்டத்தை அறிவித்துள்ளது. இத் தொழிற்துறையின் முன்னோடியான இந்த முயற்சியானது Ideal Motors மற்றும் Ideal First Choice வேலைத்தளங்கள் இரண்டிலிருந்தும் தொடர்ச்சியாக பராமரிப்பு சேவைகளைப் பெறும் வாகன உரிமையாளர்களுக்கானதாகும். Ideal Motors இன் பிரதான வேலைத்தளம் இரத்மலானையில் அமைந்துள்ளதுடன், இங்கு பிரத்தியேகமாக Mahindra வாகனங்களுக்கான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளை முன்னெடுக்கின்றது. மேலும் நாடு முழுவதும் அமைந்துள்ள 11 வேலைத்தளங்களும் Mahindra வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன வர்த்தகநாம வகைகளுக்குமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.
Ideal Group இன் ஸ்தாபகரும், தலைவருமான நளின் வெல்கம கருத்து தெரிவிக்கையில்; “இலங்கையின் ஒட்டோமொபைல் சந்தையில் முதல் தடவையாக இலவச தனிநபர் விபத்து காப்புறுதி திட்டத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Ideal Group இல், எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தொடர்ந்து புதுமையான தீர்வுகளை வழங்குகிறோம். எங்களிடமிருந்து தங்கள் வாகனங்களுக்கான பராமரிப்பு சேவையை பெற்றுக்கொள்வதற்கு முன் வந்தமைக்காக எந்தவொரு வர்த்தகநாமத்தின் வாகன உரிமையாளரும் இந்த வெகுமதியுடன் கௌரவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இதற்காக நாம் மிகவும் புகழ் பெற்ற, நம்பிக்கைக்குரிய Allianz insurance Lanka Pvt Ltd உடன் கைகோர்த்துள்ளோம்,”என்றார்.
எந்தவொரு Ideal Motors மற்றும் Ideal First Choice வேலைத்தளங்களிலும் முன்னெடுக்கப்படும் ரூபா 4000 இற்கு அதிகமான தொழில் சேவைகளும் அதிகபட்சம் ரூபா 400,000 வரையான இலவச தனிநபர் விபத்துக் காப்புறுதிக்கு தகுதி பெறுகின்றன. தற்செயலான மரணம், முழு மற்றும் / அல்லது நிரந்தர ஊனம், ஒரு காரில் பயணியாக விபத்து காரணமாக ஏற்பட்ட தற்செயலான மரணம், பைக் ஓட்டுநராக, ஈமச்சடங்கு சலுகைகள், மருத்துவ செலவுகள் மற்றும் நாளாந்த மருத்துவமனை பண உதவித்தொகை உள்ளிட்ட பல சலுகைகளை காப்புறுதித் தொகை வழங்குகிறது. தற்செயலான விபத்து காரணமான உயிரிழப்பு மற்றும் / அல்லது ஊனம் ஆகியவற்றுக்கு ரூ .400,000 வரையான தொகையை உள்ளடக்குகின்றது. ரூபா 40,000 தொகை ஈமச்சடங்கு செலவுகளாக உள்ளடக்கப்படுவதுடன், மருத்துவ செலவுகளுக்கென ரூபா 40,000 வரையான தொகையானது அரச அல்லது தனியார் மருத்துவமனை என்ற வேறுபாடின்றி வழங்கப்படும். தனிப்பட்ட விபத்துக் காப்புறுதித் தொகையானது இயற்கை காரணங்கள் அல்லது தொடர்பில்லாத பிற நோய்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமையை உள்ளடக்காது.
Ideal Group பற்றி
மூன்று தசாப்த காலமாக இலங்கையின் உள்நாட்டு ஒட்டோமோட்டிவ் துறை மற்றும் சந்தைக்குப் பின்னரான தீர்வு தொழிற்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிறுவனங்களாக திகழும் Ideal Holdings மற்றும் Ideal Group, இலங்கையில் முன்னணியில் திகழும் உண்மையான இலங்கை குழும நிறுவனங்களாகும். இக் குழுமத்தின் பலமானது 1000 இற்கும் அதிகமான குழு உறுப்பினர்களைக் கொண்டதுடன், ரூபா 20 பில்லியனுக்கும் அதிக வருடாந்த வருமானத்தைக் கொண்டுள்ளது. ஒரு முன்னோடியாக Ideal Group, மோட்டார் வாகனங்களை பொருத்துதல், இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும் பல வர்த்தகநாமங்களின் உதிரிப்பாகங்கள், வாகனங்களுக்கான விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றது. 2019 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் பாரிய இந்திய நிறுவனமான Mahindra Finance, 2021 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டு வரையில் ரூபா 2 பில்லியன் முதலீட்டை அறிவித்திருந்ததுடன், Ideal Finance இல் தனது பங்குகளை 58.2% ஆக அதிகரித்திருந்தது. Ideal Finance மூலம், குழுமமானது நிதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவைகள், லொஜிஸ்டிக் மற்றும் பொருளாதார தரங்களை மேம்படுத்தும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் இயலுமைப்படுத்தும் பல சேவைகளில் கவனம் செலுத்துகிறது.
Ideal Group இலங்கையில் Mahindra மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏக விநியோக உரிமைகளையும், இலங்கையின் வெலிபென்னவில் உள்ள “முதல் வாகன இணைப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலை” இன் இணை உரிமையையும் கொண்டுள்ளது. இது Ideal Group மற்றும் Mahindra and Mahindra ஆகியனவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியின் துணை நிறுவனமாகும். 2019 ஆம் ஆண்டியில் ரூபா 3 பில்லியன் முதலீடொன்று அதி நவீன வாகன இணைப்பு தொழிற்சாலைக்கென மேற்கொள்ளப்பட்டதுடன், இதில் 65% பங்கினை Mahindra Ideal Lanka (Pvt) கொண்டுள்ளது. வருடாந்தம் 5000 வாகனங்களை உற்பத்தி செய்யும் இயலுமையுடன் கூடிய இந்தத் தொழிற்சாலையானது தெற்காசிய நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ய எதிர்பார்ப்பதுடன், உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தி வருகின்றது. இதுவே சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ‘Make in Sri Lanka’ SUV காரான KUV100 NXT இன் கருவும் ஆகும். சேவையே பிரதானம் என்ற தத்துவத்தைத் தொடர்வதுடன், குழுமமானது Ideal விற்பனை காட்சியறைகள், சந்தைக்கு பின்னர், அசல் உதிரிப்பாக விநியோகஸ்தர்கள், பல வர்த்தகநாம வேலைத்தளங்கள், டயர்கள் மற்றும் முதற்தர வேலைத்தளங்கள் என இலங்கை முழுவதும் தனது தடத்தை பதித்துள்ளது.