Tamil

HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Summary

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியானது ஆறு மாதங்கள் நடைபெற்றது. hSenid Software International நிறுவனத்தின் துணை […]

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியானது ஆறு மாதங்கள் நடைபெற்றது.

hSenid Software International நிறுவனத்தின் துணை நிறுவனமான BeyondM, தெனுமை மில்லியனையை போட்டிக்கான தளம் மற்றும் சேவை வழங்குநர் பங்காளராக செயற்பட்டிருந்தது. BeyondM, உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது.

இதன் வெற்றியாளர்கள் ஆறு மாத காலத்தின் பின்னர்  கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்ற மாபெரும் குலுக்கலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டனர். வினா விடையானது போட்டியாளர்களுக்கு அவர்கள் பெற்ற புள்ளிகளின் விகிதாசாரத்துக்கு அமைய வெற்றி வாய்ப்புகளை வழங்கியது. முதல் பரிசு களனியைச் சேர்ந்த ஜே எம் டபிள்யூ ஏ தர்மரத்னவுக்கும், இரண்டாவது பரிசு தெமட்டகொடையைச் சேர்ந்த எம் எச் எம் நஜுபுதீனுக்கும், மூன்றாம் பரிசு புத்தளத்தைச் சேர்ந்த ஏ எச் ஆர் மொஹமட்டுக்கும் வழங்கப்பட்டன.

தெனுமை மில்லியனையை அதிகளவில் வெகுமதிகளை வழங்கும் போட்டி மட்டுமல்ல, பாவனையாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தவும்,  ஓய்வு நேரத்தை குதூகலமாக கழிக்கும் அதேவேளை வினைத்திறனாக செலவிடவும் உதவுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் பாவனையாளர்கள் WIN என டைப் செய்து 6633 க்கு ஒரு SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் அல்லது play storeலிருந்து அப்ளிகேஷனை தரவிறக்குவதன் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது. HUTCH தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களின் வலையமைப்பு தேவைகளுக்கும் தனது சேவையை வழங்கி பூர்த்தி செய்து வருகின்றது.

பெயர்கள் இடமிருந்து வலமாக

HUTCH வாடிக்கையாளர் சேவைகள், பிரதி முகாமையாளர், செஹாரா மொராயஸ், 3ஆம் இடம் ஏ.எச்.ஆர். மொஹமட் – புத்தளம், hSenid Mobile Solutions – கணக்கு முகாமையாளர், இசுறு எதிரிமான்னகே, HUTCH வாடிக்கையாளர் சேவைகள் பொது முகாமையாளர், மரினா இமானுவல், வெற்றியாளர் ஜே.எம்.டபிள்யூ.ஏ. தர்மரத்ன- களனி, hSenid Mobile Solutions நிதிப் பணிப்பாளர், சமன் குமார, HUTCH பொது முகாமையாளர் பெறுமதி சேர் சேவைகள், கசுன் ஜயசூரிய, 2 ஆம் இடம் எம்.எச்.எம்.நஜுபுதீன் – கொழும்பு 9, hSenid Mobile Solutions தலைவர் – பெறுமதி சேர் சேவைகள், தனசிறி விஜேதாஸ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *