Fortumo உடன் இணைந்து இலங்கையில் நேரடி carrier billing வசதியை வழங்கும் Hutch
Summary
ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு உலகளாவிய சேவை அனுபவத்தை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியாக, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch, முன்னணி மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான Fortumo உடன் கைகோர்த்துள்ளது. இந்த Fortumo உடனான பங்குடமையானது Hutch வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குனரின் கட்டணப்பட்டியலுக்கு (carrier billing) நேரடி அணுகலை வழங்குவதனால், உயர்தர உலகளாவிய உள்ளடக்க சேவைகளுக்கான […]
ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு உலகளாவிய சேவை அனுபவத்தை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியாக, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch, முன்னணி மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான Fortumo உடன் கைகோர்த்துள்ளது.
இந்த Fortumo உடனான பங்குடமையானது Hutch வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குனரின் கட்டணப்பட்டியலுக்கு (carrier billing) நேரடி அணுகலை வழங்குவதனால், உயர்தர உலகளாவிய உள்ளடக்க சேவைகளுக்கான டிஜிட்டல் சந்தாக்களை வாடிக்கையாளர்கள் தமது Hutch முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் மீதிகளின் ஊடாக சிக்கல்கள் இன்றி செலுத்த முடியும்.
Fortumo நேரடி carrier billing வசதியானது ஒரு பாதுகாப்பான ஒன்லைன் கட்டண முறையாக வளர்ச்சியடைந்து வருவதுடன், இது இன்றைய வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இந்த சேவையின் முக்கியத்துவம் என்னவென்றால், பாவனையாளர்கள் எந்தவொரு கணக்கையும் உருவாக்கவோ அல்லது தனிப்பட்ட தரவைப் பகிரவோ வேண்டிய தேவையில்லாமல், எளிய 2 கட்ட உறுதிப்படுத்தல் செயல்பாட்டின் மூலமாக பிரதான கணக்கு நிலுவையிலிருந்து கட்டணப்பட்டியலானது நேரடியாக வசூலிக்கப்படுகின்றமையாகும்.
இந்த புதிய சேவை குறித்து Hutch இன் மூலோபாய பங்குடமைகளுக்கான பிரதி பொது முகாமையாளர் பிராஸ் மர்கார் கருத்து தெரிவிக்கையில், “நேரடி carrier billing சேவையை வழங்க ஒரு சிறந்த டிஜிட்டல் கட்டண தீர்வாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள Fortumo உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது, எங்கள் வாடிக்கையாளர்கள் கிரெடிட் / டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தாமல் செயலிகள், விளையாட்டுகள், இசை, வீடியோக்கள் மற்றும் பிற சிறந்த சேவைகளிலிருந்து தங்களுக்கு பிடித்த உள்ளடக்கத்திற்கு செய்வதற்கும் தடையின்றி கட்டணம் செலுத்துவதற்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணுகலைப் பெறலாம். நேரடி carrier billing சேவை குறுகிய காலத்திற்குள் இலங்கையின் ஒன்லைன் பில் செலுத்தலில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,”என்றார்.
“இலங்கை போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் டிஜிட்டல் உள்ளடக்க பார்வையாளர்களின் விகிதம் வளர்ந்து வருவதாக அமைந்துள்ளது. இந்த உள்ளூர் பாவனையாளர்களை பாரம்பரிய கட்டணம் மற்றும் சந்தைப்படுத்தல் அலைவரிசைகள் மூலம் அணுக முடியாது. Carrier billing என்பது மிகவும் பரவலாகக் கிடைக்கும் உள்ளூர் கட்டண முறையாகும், மேலும் எமது வர்த்தகர்களுக்கு கிடைக்கும் வகையில், அவர்களின் வலையமைப்பில் கட்டணம் செலுத்த Hutch உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என Fortumoவின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடனான பங்குடமைக்கான பிரதித் தலைவர் டாவி கிருஷெல் தெரிவித்தார்.