குழந்தையை ஈன்ற தாய்மார்களுக்கு பரிசளிக்க சுதேசி கொஹோம்ப பேபி Hatton National Bank உடன் கூட்டிணைந்தது
Summary
80 ஆண்டுகளாக இலங்கையின் முதற் தர மூலிகை பராமரிப்பு வர்த்தக நாமமான சுதேஷி கொஹோம்ப, அதன் குழந்தைகளுக்கான தரக்குறியீடான Khomba Baby ஆனது, Hatton National Bank உடன் இணைந்து புதிதாக குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு வழங்குகிறது. இத்திட்டத்தில், சுதேசி கொஹோம்ப பேபி (Swadeshi Khomba Baby) ஆனது, கவர்ச்சிகரமான கொஹோம்ப பேபி தனிப்பட்ட […]
80 ஆண்டுகளாக இலங்கையின் முதற் தர மூலிகை பராமரிப்பு வர்த்தக நாமமான சுதேஷி கொஹோம்ப, அதன் குழந்தைகளுக்கான தரக்குறியீடான Khomba Baby ஆனது, Hatton National Bank உடன் இணைந்து புதிதாக குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு வழங்குகிறது. இத்திட்டத்தில், சுதேசி கொஹோம்ப பேபி (Swadeshi Khomba Baby) ஆனது, கவர்ச்சிகரமான கொஹோம்ப பேபி தனிப்பட்ட பராமரிப்பு பாதுகாப்பு பரிசுப் பொதியை பரிசளிக்கும் அதே வேளையில் Hatton National Bank ஆனது, HNB கிரிகட்டியோ கிப்ட் வவுச்சரை வழங்குகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த Swadeshi Industrial Works PLC நிறுவனத்தின் பிரதித் தலைவரும் நிர்வாக பணிப்பாளருமான திருமதி. CSM சமரசிங்க, “இலங்கைத் தாய்மார்கள் மற்றும் அவர்களின் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, பிறந்த குழந்தையின் தனிப்பட்ட பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பரிசுப் பொதியை பரிசளிக்க Hatton National Bank உடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இளம் தாய்மார்களுக்கு இயற்கையான மூலப்பொருள் அடிப்படையிலான, குழந்தைகளின் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதன் நற்குணத்தைப் பற்றி விழிப்புணர்வூட்டும் முயற்சியின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மகப்பேற்று மருத்துவமனைகளுக்கு சுதேசி இந்த பங்களிப்பை வழங்கும். பரிசுப் பொதிகளுடன் சுதேசி கொஹோம்ப பேபி குழந்தை பராமரிப்பு பற்றிய பயனுள்ள தகவல் புத்தகத்தையும் அது வழங்குகிறது. இயற்கையோடும் புதிதாகப் பிறந்த குழந்தையோடும் எவ்வாறு இணைந்திருக்க வேண்டும் என்பதை இளம் தாய்மார்களுக்கு அப்புத்தகம் கற்பிக்கிறது” என்றார்.
இலங்கையில் வாழும் சமூகங்களின் வாழ்வை வளப்படுத்தும் பல்வேறு பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டங்களில் உள்ளூர் சமூகங்களுக்கு உதவுவதில் சுதேசி ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இலங்கைத் தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் மென்மையான சருமத்தில் இயற்கையான, பாதுகாப்பான மற்றும் மென்மையான குழந்தைகளின் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டுமென யோசனை கொண்டுள்ள எமது இதயத்தில் இருந்து இந்த கூட்டாண்மைக்கான யோசனை எழுகிறது. அவ்வாறு சிறந்த இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட சந்தையிலுள்ள சவர்க்காரமாக சுதேசியின் கொஹோம்ப பேபி திகழ்கின்றது. அத்துடன், 1941 ஆம் ஆண்டு முதல் சிறந்த தரமான மூலிகை தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் சவர்க்காரங்களை உற்பத்தி செய்யும் பாரம்பரியத்தையும் அது கொண்டுள்ளது.
சுதேசி எனும் வகையில் நாம் 1941 ஆம் ஆண்டு முதல் மிருதுவான மூலிகை சவர்க்காரங்களை தயாரித்து வருகிறோம் என்பதுடன், சிறந்த மூலிகைப் பொருட்களைக் கொண்ட Khomba Baby தயாரிப்புகள் எமது நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்கிறது. சவர்க்காரம், கொலோன், க்ரீம், பவுடர், எண்ணெய், ஷாம்பு, கிப்ட் பெக் ஆகியவற்றை உள்ளடக்கிய Khomba Baby தயாரிப்பு வகைகள், காலத்திற்கேற்ற, ஒரேயொரு மூலிகைப் பொருட்களைக் கொண்ட உள்ளூர் சந்தையில் உள்ள தயாரிப்புகளாகும். சுதேசியின் தயாரிப்புகள் யாவும், சிறந்த ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு, சருமத்தில் மென்மையாக செயற்படும் தன்மை போன்ற, இயற்கைக்கு உகந்த தயாரிப்புகளைத் தேடிவரும் நுகர்வோரின் அதிகரித்து வரும் சந்தைக் கேள்வியை பூர்த்தி செய்கிறது.
அனைத்து கொஹோம்ப பேபி பராமரிப்பு தயாரிப்புகளிலும் வேம்புச்சாறு (Neem/Margosa) எனும் அற்புத மூலப்பொருள் கலந்துள்ளது. இது குழந்தையின் சருமத்தை அதன் லேசான மற்றும் மென்மையான தூய்மைப்படுத்தும் சக்தியுடன் கிருமிகள் மற்றும் தோல் எரிச்சலில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கிறது. Khomba Baby Soap ஆனது, மூலிகைகளின் சிறந்த கலவையைக் கொண்ட, உள்ளூர் சந்தையில் உள்ள ஒரேயொரு குழந்தைகளுக்கான சவர்க்காரமாகும். இது சருமத்திற்கு அத்தியாவசியமான போசாக்கை வழங்குவதுடன் தோலில் லேசான நறுமணத்தையம் அளிக்கிறது.
கொஹோம்ப பேபி உற்பத்திகளில் நான்கு வகை சவர்க்காரங்கள், க்ரீம், கொலோன் ஆகியன உள்ளடங்குகின்றன. கொலோன் வகைகளில், Khomba Baby Herbal ஆனது வேம்பு, கற்றாழை, ஒலிவ் எண்ணெயை கொண்டுள்ளது. Khomba Baby Floral ஆனது, வேம்பு, சிவப்பு இக்ஸோரா, பன்னீர், ஒலிவ் எண்ணெயை கொண்டுள்ளது. Khomba Baby Venivel ஆனது, வேம்பு, சந்தனம் ஒலிவ் எண்ணெயை கொண்டுள்ளது. Khomba Baby Avocado ஆனது, வேம்பு, ஆனைக்கொய்யா, ஒலிவ் எண்ணெயை கொண்டுள்ளது. அனைத்து கொஹோம்ப பேபி உற்பத்திகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் சான்றளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனைத் திரவிய சங்கத்தால் (IFRA) சான்றளிக்கப்பட்டு ISO 9001 – 2015 தரநிலைகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.
இவை அனைத்திலுமுள்ள முக்கிய மூலப்பொருளாக உள்ள வேம்பு, பல நூற்றாண்டுகளாக இலங்கை தாய்மார்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகைப் மூலப்பொருளாகும். கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்பு நிபுணரான சுதேசி, இந்த மூலிகைகளை கவனமாக தேர்ந்தெடுத்து உயர்ந்த தரத்துடன் கூடிய சிறந்த மூலிகைகளின் கலவைகளை உங்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த மூலிகைகளின் கலவைகள் பல தலைமுறைகளாக குழந்தைகளைக் குளிப்பாட்டப் பயன்படுத்தப்படுவதன் மூலம் அவர்களை கிருமிகளிலிருந்து தூய்மையாக்க இயற்கையாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், சருமத்தில் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்துவது எப்போதும் பாதுகாப்பானது என்பதுடன், அவை மிருதுவானதாகவும் இருக்கும்.
“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு நிறுவனமாக, சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென நாம் விரும்புகிறோம். நாங்கள் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை.”
100% உள்ளூர் நிறுவனமாக சுதேசி தனது தேசத்தைக் கட்டியெழுப்பும் என்பதுடன், இலங்கை சமூகங்களுக்கான அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களையும் (CSR) தொடரும். சுதேசி கொஹோம்ப வர்த்தக நாமமானது, இயற்கை அன்னையை பராமரிப்பதிலும் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் நிலைபேறானதன்மை திட்டங்களை செயல்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விகாரைகளை ஒளியூட்டும் ‘கொஹோம்ப ஆலோக பூஜா’ நிகழ்வுகள், விகாரைகள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கான கை கழுவும் தொகுதிகள் வழங்கல், கொவிட்-19 தொற்றுநோய்களின் போது குழந்தைகளை நோக்காகக் கொண்ட வீடியோ மூலமான கைகளை கழுவுதல் தொடர்பான விழிப்புணர்வுகள், வேம்பு மர நடுகை பிரசாரங்கள், இலங்கையின் வரண்ட வலயத்தில் உள்ள சமூகத்தினருக்கு தண்ணீர் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல் ஆகியன, நிறுவனத்தின் பல சமூக நல முயற்சிகளாகும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பரிசுகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு சிறந்த விழுமியங்களை எடுத்துரைக்கும் “ஹொந்த புறுது” (சிறந்த பழக்கவழக்கங்கள்) புத்தகம் மூலம் மாணவர்களை கொஹோம்ப பேபி விழிப்பூட்டுகின்றது.
இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும், சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசி கொஹோம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹோம்ப பேபி, லிட்டில் பிரின்சஸ், பேர்ல்வைட், லக் பார், சேஃப் ப்ளஸ், லேடி, பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் மற்றும் சுதேசி பொடி வொஷ் & ஷவர் ஜெல் ஆகியன சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் உள்ளடங்குகின்றன. சுதேசியின் அனைத்து தயாரிப்புகளும் 100% தாவர ரீதியானது என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன. இது நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கிறது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, அண்மையில், எந்தவொரு நிறுவனமும் பெறாத COVID-19 பாதுகாப்பு முகாமைத்துவ சான்றிதழை பெற்றதுடன், இவ்வாறான தொழில்துறையில் முதன்முதலாக தனது பெயரில் பெற்ற பல்வேறு உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக அது திகழ்கின்றது.