SLDA மற்றும் Neth FM உடன் இணைந்து வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துள்ள Clogard
Summary
இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய்ச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) இணைந்து Neth FM வானொலியில் பற்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. COVID-19 தொற்றுநோய் நமது […]
இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய்ச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) இணைந்து Neth FM வானொலியில் பற்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
COVID-19 தொற்றுநோய் நமது அன்றாட நடைமுறைகளை கணிசமாக மாற்றியமைத்துள்ள நிலையில், அது எமது உணவுப் பழக்கத்தையும் மாற்றியமைத்து அதன் மூலம் எமது பற்களின் பராமரிப்பையும் பாதித்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக கல்வித் துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் புதிய பழக்கங்களுக்கு ஏற்றவாறு நீண்ட நேரம் வீட்டிலேயே செலவிட வேண்டியிருக்கின்றன. இதன்போது பெரும்பாலான நேரங்கள், உணவு உட்கொள்வதிலேயே கழிகின்றன. சிற்றுண்டிப் பழக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகளின் உணவு முறைகள் பாதிப்பான போக்கை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக குழந்தைகள் தொலைக்காட்சியை பார்த்தவாறு சாப்பிடுவது அல்லது வீடியோ கேம் விளையாடும்போது சிற்றுண்டி உண்வதை பழக்கமாக கொண்டுள்ளனர்.
அத்துடன், பாடசாலை பல் மருத்துவ முகாம்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை மற்றும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான பெற்றோரிடமிருந்த பயம், கவலைகள் ஆகியன, வழக்கமான பல் பராமரிப்பு தொடர்பான வைத்தியரை சந்திப்பதிலிருந்து பின்வாங்கச் செய்தன. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடையே தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும், புளோரைட் பற்பசைகளைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கச் செய்வதன் மூலமும், சிறந்த வாய்ச் சுகாதாரத்தைப் பேணுவதை உறுதிசெய்வது முன்னரை விட தற்போது அவசியமாகும்.
Neth FM மற்றும் SLDA உடன் ‘Clogard இணைந்து – ஆரோக்கியமான வாய்க்கான ஒரு படி (நிரோகி முவகட பியமன் – Nirogi Muwakata Piyaman) எனும் விழிப்பூட்டல் தொடர் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. இது பொது ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்பதால், ஒவ்வொரு குடும்பமும் வாய் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதனை ஊக்குவிக்கும் நோக்குடன் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. தொற்றுநோய் நிலைமையின் போது மாத்திரமன்றி ஒவ்வொரு நாளும் தங்கள் பற்களைப் பாதுகாப்பது தொடர்பான சிறந்த பல் பராமரிப்பு பழக்கங்களைப் பயிற்சி செய்ய வீட்டில் சிறிது நேரம் ஒதுக்குமாறு குடும்பங்களை க்ளோகார்ட் ஊக்குவிக்கிறது.
‘வாய்ச் சுகாதாரப் பராமரிப்பின் முக்கியத்துவம்’, ‘புளோரைட் கலந்த பற்பசையைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம்’, ‘பல் துலக்குவதன் முக்கியத்துவம்’ போன்ற முக்கியமான தலைப்புகளை உள்ளடக்கிய இந்த பிரசாரமானது, சிறந்த வாய்ச் சுகாதாரத்துடன், பற்குழி அற்ற இலங்கையை உருவாக்கும், க்ளோகார்ட் தரக்குறியீட்டின் நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது.
‘Clogard – நிரோகி முவகட பியமன்’ பிரசாரம் பல் மிளிரியை வலுப்படுத்துவதிலும் பல் சிதைவைத் தடுப்பதிலுமான புளோரைட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
நவம்பர் 07 ஆம் திகதி பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை Neth FM Facebook பக்கத்தின் ஊடாக நேரடியாக வாய்ச் சுகாதார பராமரிப்பு கிளினிக் நடைபெற்றதுடன், Neth FM வானொலி அலைவரிசையிலும் அது ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது. பல் சுகாதார பிரச்சினைகள் குறித்த நுகர்வோரின் கேள்விகள் WhatsApp ஊடாகவும் 0711 959 595 எனும் இலக்கத்தினை அழைப்பதன் மூலமாகவும் கேட்கப்பட்டன. இக்கேள்விகள், பிரச்சினைகளுக்கான பதில்கள் மருத்துவர்கள் குழுவினால் வழங்கப்பட்டன.
அத்துடன், நவம்பர் 08, 2021 முதல் டிசம்பர் 08, 2021 வரையான காலப்பகுதியில் சித்திரப் போட்டியொன்றும் இடம்பெறுகின்றது. இதன் மூலம், ‘ஆரோக்கியமான வாய்க்கான ஒரு படி’ (நிரோகி முவகட பியமன்)
எனும் பிரசாரக் கருப்பொருளின் அடிப்படையில் சிறுவர்கள் வாட்ஸ்அப் வழியாக சித்திரங்களை அனுப்புமாறு வேண்டப்படுகிறார்கள். இப்போட்டியானது, மூன்று வயதுப் பிரிவினர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 3-5 வயது, 6-10 வயது, 11-15 வயது ஆகிய பிரிவுகளே அவையாகும். இதில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலிருந்தும் 10 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இப்போட்டியின் மூலம் மொத்தமாக 30 பரிசுகள் வழங்கப்படுகின்றன.
Neth FM உடனான இந்நிகழ்ச்சியை, இவ்வாண்டின் இறுதி வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் பல் மருத்துவத் துறையின் தேசிய மற்றும் தாய் அமைப்பான SLDA இன் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன், Neth FM சிங்கள மொழி வானொலி நிலையத்துடன் இணைந்து, இலங்கை முழுவதுமுள்ள குடும்பங்களுக்கான எளிய மற்றும் சுகாதாரமான பல் பராமரிப்பு நடைமுறைகளை ஊக்குவிக்க Clogard உறுதியாக உள்ளது.
க்ளோகார்ட் தற்போது ஹேமாஸ் e-ஸ்டோர்களில்: https://hemasestore.com/brand/clogard/ கிடைக்கிறது. அத்துடன், பேன்சி ஸ்டோர்கள், அழகுசாதன விற்பனை நிலையங்கள், பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்ற தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களிலிருந்தும் அதனை கொள்வனவு செய்யலாம்.
Hemas Consumer Brands ஆனது, வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறையில் மிகப் பெரும் இலங்கை நிறுவனமாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலான உயர்ந்த பாரம்பரியத்துடன், வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியிடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை அது வென்றுள்ளது. அது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது.
பல முன்னணி தரக்குறியீடுகளை தன்னகத்தே கொண்டு வலுப்பெற்றுள்ள Hemas Consumer Brands ஆனது, Aya பெண்களின் சுகாதாரம், புற்றுநோயாளிகளுக்கான குமாரிகா சொந்துறு திரியவந்தி போலி சிகை நன்கொடைத் திட்டம், பேபி செரமியின் முற்போக்கான பெற்றோருக்குரிய முன்முயற்சி போன்ற பல சமூக ரீதியான திட்டங்களை முன்னெடுத்து, தனது முயற்சிகளின் மூலம் புதுமைகளை உருவாக்கி மக்கள் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளது. Hemas Consumer Brands சிந்தனையின் மூலம் புரட்சிகரமான தயாரிப்புகளான Vivya பாரம்பரிய அரிசி அடிப்படையிலான சருமப் பராமரிப்பு தயாரிப்புகள் மாத்திரமன்றி இயற்கை மீது அக்கறை கொண்டு Dandex Handy, Kumarika Poddi ஷாம்பு வகைகளின் பொதியிடல் மூலம், ஒற்றை உபயோகப் பொதிகளின் பயன்பாட்டை இல்லாதொழித்து, பசுமையான தேசத்திற்கான அதன் அர்ப்பணிப்பை அது காண்பிக்கிறது. அந்த வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிலைபேறான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு, நிறுவனம் பல வழிகளிலும் முற்போக்காக செயற்பட்டு முன்னணியில் திகழ்கிறது.
###